ரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2013 11:04
கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில், நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற கரூர் அபயபிரதான ஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதை தொடர்ந்து நாள்தோறும், பல்வேறு வாகனங்களில் ஸ்வாமியின், திருவீதி உலா நடக்கிறது. வரும் 25ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, 26 ம் தேதி அமராவதி ஆற்றில் தீர்த்த வாரி, 28 ம்தேதி ஊஞ்சல் உற்வசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, உதவி ஆணையர்கள் ரத்தினவேல் பாண்டியன், முல்லை ஆகியோர் செய்து வருகின்றனர்.