தேவிபட்டணம் காளியம்மன் கோயிலில் மே 29ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2013 11:04
சிவகிரி: தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன்கோவிலில் மகா கும்பாபிஷேகம் மே 29ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. தேவிபட்டணம் தட்டாங்குளத்து காளியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் உள்ள அம்மன் சிங்க வாகனத்தில் நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த ஆண்டு மூலஸ்தான கோபுரப்பணி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மண்டபம் அமைத்தல், மண்டபபணி உட்பட பல்வேறு பணிகள் பிரியம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் தங்கமணி- களஞ்சியம் குடும்பத்தினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. நிர்வாக அலுவலர் ராமராஜ், திருப்பணி உபயதாரர் தங்கமணி மற்றும் தேவிபட்டணம் அனைத்து சமுதாய நாட்டாண்மைகள் கலந்து கொண்டனர். இக்கோவில் மே 29ம் தேதியான வைகாசி 15ம் தேதி புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடத்துவது எனவும், பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினர்களின் முழு ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்யப்பட்டது.