பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
செங்காடு: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள முத்துவீராசாமி கோவிலில், 36வது ஆண்டு, சித்திரை திருவிழா மற்றும் கும்பாபிஷேகம், நாளை முதல் நடைபெற உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளுர் சாலையில், செங்காடு கிராமத்தில், பழமையான ஸ்ரீ முத்துவீராமசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடம்தோறும், சித்திரை மாதம், சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, (23ம் தேதி) நாளை, கோவிலில் 36ம் ஆண்டு சித்திரை திருவிழா, காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை மறுநாள் 24ம் தேதி, காலை 8:00 மணிக்கு, பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழாவும், நடைபெற உள்ளது. இவ்விழாவில், செங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் எராளமானோர் கலந்துகொண்டு, ஸ்ரீ முத்துவீராசாமி தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்வர். 25ம் தேதி, கோவில் வளாகத்தில் காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள்ளாக, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.