பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
கன்னியாகுமரி: சித்ராபவுர்ணமி தினமான வரும் 25-ம் தேதி கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் அதே வேளையில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை காண லட்சகணக்கான சுற்றுலாபயணிகள் கூடுகின்றனர். இதையொட்டி பகவதிஅம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடக்கிறது. தமிழ் புத்தாண்டுபிறந்த முதல் பவுர்ணமியை சித்ராபவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் அரபிக்கடல் பகுதியில் மாலை 6.20 மணியளவில் சூரியன் மெல்ல,மெல்ல மறையும், அதே வேளையில் வங்ககடல் பகுதியில் சந்திரன் வெண்மை நிறத்தில் தோன்றும்.ஒரே நேரத்தில் தோன்றும் இந்த அபூர்வ காட்சி கன்னியாகுமரியிலும், ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டுபகுதியிலும் தான் காணமுடியும். கன்னியாகுமரியிலும், பழத்தோட்டம் முருகன்குன்றத்திலும் இந்த காட்சியை காண லட்சகணக்கான சுற்றுலாபயணிகள் கூடுகின்றனர். பகவதிஅம்மன் கோயிலில் சிறப்புபூஜை சித்ராபவுர்ணமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் சிறப்புபூஜை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனமும் தொடர்ந்து நிர்மால்ய பூஜை , 5 மணிக்கு அபிஷேகம், 5.45 மணிக்கு உஷபூஜை, 6 மணிக்கு தீபாராதனை, 6.15 மணிக்கு ஸ்ரீபலிபூஜை, 8 மணிக்கு பந்திரடிபூஜை, 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு அம்மனுக்கு வைரகீரிடம், மூக்குத்தி, தங்க ஆபரங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு உச்சகால பூஜை,11.45 மணிக்கு ஸ்ரீபலிபூஜை, 12 மணிக்கு அன்னதானம், மாலை 4மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை,இரவு 7மணிக்கு புஷ்பாபிஷேகம், 7.45 மணிக்கு அத்தாழபூஜை, 8 மணிக்கு தீபாராதனை, 8.10 மணிக்கு ஸ்ரீபலிபூஜை, 8.20 மணிக்கு பல்லக்கில் மேளதாளம் முழங்க உற்சவஅம்மன் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, 8.30 மணிக்கு ஏகாந்தபூஜை ஆகியன நடக்கிறது.