குற்றாலம்: குற்றாலம் சித்திரசபையில் ஓவியம் தீட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. பஞ்சசபைகளில் ஒன்றான குற்றாலத்தில் ஒன்றாக சித்திரைசபை விளங்கிவருகிறது. இங்குள்ள ஓவியங்கள் பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிதருகின்றன. இத்தகைய சித்திரசபை ஓவியங்கள் பலஆண்டுகளாக ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்பட்டுவந்தன. இதனை தொடர்ந்து குற்றாலம் சித்திரை சபை ஓவியங்களுக்கு மெருகூட்டும் வகையில் உபயதாரர் மூலமாக சுமார் 30லட்சம் ரூபாய் செலவில் ஓவியங்களை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப் ட்டுவருகிறது. ரூரை சேர்ந்த தங்கவேலு என்பவரின் உபயதாரர் பணிகளாக இப்பணிகள் நடந்து ருகிறது. சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து சித்திரசபையில் வரையப்பட்டு வரும் ஓவியங்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் கண்ணாடி பாதுகாப்பு அமைக்கப்படஉள்ளது. இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்:-சித்திரசபையில் ஓவியங்கள் புதுப்பிக்கும் பணிகள் பெருமளவில் முடிவுபெற்றுவிட்டன. தொடர்ந்து ஓவியங்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் கண்ணாடி பாதுகாப்பு அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் உபயதார்கள் மூலமாக மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அறநிலையத்துறை மூலமாகவும் இந்த பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மே மாதத்திற்குள் முழுமையான அளவில் பணிகள் முடிக்கப்பட்டு சித்திரசபை நடராஜருக்கு கும்பாபிஷேகம் நடத்திடவும் ஏற்பாடு நடந்துவருகிறது. குற்றால சீசன் காலங்களில் சித்திரசபையை காணவரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் அதற்கான பணிகளும் முடிக்கிவிடப்பட்டுவருகிறது என தெரிவித்தார்.