பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
10:04
புட்டபர்த்தி: சாய்பாபாவின், இரண்டாம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு, அவரது சமாதி அமைந்துள்ள பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாயி ஆராதனை நடந்தது. ஆராதனையின் முதல் நாள்(ஏப்., 22) காலை 6 மணிக்கு, ஹோமம், ஸ்வஸ்தி வசனம், கணபதி பூஜை, புண்யாக வசனம் நடந்தன. 10 மணிக்கு முதல்நாள் விஷ்வ சாந்தி ஹோமம், பூர்ணாஹுதியுடன் நிறைவுபெற்றது. பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. மாலை, நோரி நாராயண மூர்த்தி ராமாயண சொற்பொழிவாற்றினார்; சதுர்வேத பாராயணமும் நடந்தது. இரண்டாம் நாள், விஸ்வ சாந்தி லோக கல்யாண ஹோமம், சண்டி ஹோமம், ஏகாதச ருத்ராபிஷேகம், லிங்காபிஷேகம் நடந்தன. பாபா சமாதி அடைந்த தினமுமான நேற்று, சுதர்சன ஹோமத்திற்கு பின், ஸ்ரீ சத்ய சாயி கல்விக் குழும மாணவர்கள், குரு வந்தனத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விஷ்வ சாந்தி லோக கல்யாண ஹோமம், மகா பூர்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. பின், ஏழைகளுக்கு, துணி, உணவு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.