பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
உடுமலை: உடுமலை அருகே பெரியகுமாரபாளையம் மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29 ம் தேதி) பசும்பந்தல் அமைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. உடுமலை அருகே பெரியகுமாரபாளையம், முத்தூர், சின்னப்பூளவாடி கிராம மக்களால், மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா இன்று காலை 6.00 மணிக்கு பசும்பந்தல் அமைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு கம்பம் கங்கையில் விடுதல், இரவு 7.00 மணிக்கு கும்பம் தாளித்தல் உட்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 30 ம் தேதி மாவிளக்கு எடுத்தல், உற்சவர் தீர்த்தக்கிணற்றில், அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு 10.00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 1 ம் தேதி பூவோடு எடுத்தல், குதிரை வாகனம், கருப்பராயன் உருவங்கள் எடுத்து வருதல், பொங்கல் வைத்தல், மே 2 ம் தேதி திருவீதியுலா, மஞ்சள் நீராடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.