காரியமங்கலம் கருணா சாயி பாபா ஆலய மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2013 04:05
செஞ்சி: காரியமங்கலம் ஸ்ரீகருணா சாயி பாபா ஆலய மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா காரியமங்கலத்தில், மகாதேவி மங்கலம் கூட்ரோடு அருகே புதிதாக ஸ்ரீ கருணா சாயிபாபா ஆலயம் கட்டியுள்ளனர். இவ்வாலயத்தில் சாயி பாபாவுடன், விநாயகர், பாலமுருகர், ராஜேஸ்வரி, ஸ்ரீநிவாச பெருமாள், கிருஷ்ணர், ஐயப்பன், ஆஞ்சநேயர், ராகவேந்திரர், நவக்கிரகங்களுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைத்துள்ளனர். இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 30ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தன. காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் நடந்தன. 9 மணிக்கு கடம் புறப்பாடும், 9.15 மணிக்கு அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9.45 மணிக்கு அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமும், மாக தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சாயி கருணா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.