பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
புதுக்கடை: கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(5ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று(5ம் தேதி) காலை கணபதிஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தேவஸ்தான தந்திரி சங்கரன் தங்க கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றி வைத்தார். மேல்சாந்தி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து, நேர்ச்சை வாண வேடிக்கை, பொங்கல் வழிபாடு, மாலை பஜனை, இரவு மாநில பா.ஜ., தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சமயமாநாடு நடந்தது. சுவாமி சைதானந்தஜி மகராஜ், சென்னை பி.எம்.எஸ்., தலைவர் தங்கப்பன், பேராசிரியர் ராஜாராம் பேசினர். தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.விழாவில் தினமும் அதிகாலை திருப்பள்ளி எழுப்புதல், அபிஷேகம், காலை கணபதிஹோமம், தீபாராதனை, உஷ பூஜை, அபிஷேகம், மதியம் அன்னதானம், பூஜை, மாலை சிறப்பு பூஜை, இரவு அத்தாழ பூஜை, தாலப்பொலியுடன் அம்மன் பவனி, கலைநிகழ்ச்சி நடக்கிறது. இன்று(6ம் தேதி) 2ம் திருவிழாவில் காலை சந்தனகுட பவனி, பண்பாட்டுப்போட்டிகள், இரவு சுரேஷ்குமார் தலைமையில் சமயமாநாடு நடக்கிறது. 3, 4, 5ம் திருவிழாவில் காலை அம்மன் யானை மீது எழுந்தருளல், 6ம் நாள் காலை தேவஸ்தான சமயவகுப்பு ஆண்டுவிழா, இரவு வி.ஹெச்.பி., மாநில துணைத்தலைவர் குழைக்காதர் தலைமையில் சமயமாநாடு நடக்கிறது. ஏழாம் நாள் காலை பரத நாட்டிய போட்டி, மாலை ஸ்தல புராண வில்லிசை, 8ம் நாள் காலை கட்டுரைப்போட்டி, மதியம் பாட்டுப்போட்டி, இரவு மகளிர் மாநாடு, இன்னிசை நடக்கிறது. 9ம் திருவிழாவில் காலை அம்மன் அபிஷேக பால்குட ஊர்வலம், வில்லிசை, மதியம் பாலமுருகனுக்கு அபிஷேகம், அம்மன் வடவீதி பவனி நடக்கிறது.பத்தாம் திருவிழாவில் காலை வில்லிசை, ஆறாட்டுப்பலி, மாலை தென்வீதி ஆறாட்டு, இரவு சமயமாநாடு, போட்டி வாணவேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவர் குமரேசதாஸ், செயலாளர் சைலஸ்ராஜ், துணைத்தலைவர் கேசவன், இணைச்செயலாளர்கள் தர்மராஜ், சந்தோஷ்குமார், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.