கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. நாள்தோறும் உபயதாரர்கள் மூலம், அம்மனுக்கு அலங்கார வழிபாடு, அன்னதானம் நடந்து வருகிறது. கோத்தகிரி போயர் சமூகத்தினர் சார்பில், நேற்று நடந்த விழாவில் டானிங்டனில் இருந்து சூலாயுதம் மற்றும் பால்குட ஊர்வலம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு மலர் அலங்கார வழிபாடு நடத் தப்பட்டது. அம்மன் அன்னப்பட்சி வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.