பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
கருணை நிறைந்த மனதுடன் பிறருக்கு உதவும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் மாதம் முழுவதும் அனுகூலமாக உள்ளனர். மாத முற்பகுதியில் இதே இடத்தில் உள்ள குருவும், சுக்கிரனும் அளப்பரிய நற்பலனை வழங்குகின்றனர். எவரிடமும் அன்புடன் பேசி நல்லபெயர் எடுப்பீர்கள். வாழ்வில் முன்னேற கிடைக்கிற புதிய வாய்ப்புக்களை பயன்படுத்தி பணமழையில் நனைவீர்கள்.வீட்டிற்கு தேவையான வசதிகளை கூடுதல் செலவில் செய்துகொள்வீர்கள். வாகனம் ஓட்டும் போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைத்து மனதில் உற்சாகம் பெறுவர். புதிய பயிற்சிகளை அறிந்துகொள்வதில்ஆர்வம் வளரும். பூர்வ சொத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். எதிரிகளின் விமர்சனங்களை சகித்துக்கொள்கிற மனநிலை வளரும். தம்பதியர் புரிதல் தன்மையுடன் நடந்து குடும்ப நலன் பாதுகாப்பர். நல்ல நண்பர்களின் ஆலோசனையும், உதவியும் மனதிற்கு உற்சாகம் தரும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணி செய்வர். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி திருப்திகரமான அளவில் கிடைக்கும். உற்பத்தி அதிகரித்து உபரி பணவரவைத் தரும். வியாபாரிகள் விற்பனை அதிகரித்து அதிக லாபம் அடைவர். பணியாளர்கள் குறித்த காலத்தில்வேலைகளை முடித்து நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.குடும்பப் பெண்கள் கணவரின் அன்பும் தாய்வீட்டு உதவியும் கிடைத்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்கள் வேலைகளை சீக்கிரம் முடிப்பர். அதிக சலுகைகள் கிடைத்து ஆடை, ஆபரணம் வாங்குவர். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து விற்பனை, பணவரவில் முன்னேற்றம் காண்பர். தொழில்நுட்ப கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு.அரசியல்வாதிகள் எதிர்ப்பாளர்களின் தொல்லை குறைந்து விரும்பிய பதவி பெறுவர். விவசாயிகள் அதிக மகசூலும், கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து பெற்றோரிடம் விரும்பிய பரிசுப்பொருள் வாங்குவர்.
உஷார் நாள்: 30.5.13 இரவு 12.31-2.6.13 காலை 6.11.
வெற்றி நாள்: மே 20, 22
நிறம்: வெள்ளை, சிமென்ட் எண்: 4, 6
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.