சென்னை:சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் கடந்த 2ம் தேதி சித்திரை பெருவிழா துவங்கியது. ஏழாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு வீதிகளின் வழியாக சென்ற தேர், காலை 9:00 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது.தொடர்ந்து இன்று காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது.