பதிவு செய்த நாள்
11
மே
2013
10:05
திருவாரூர்: வலங்கைமான் அருகே, ஆலங்குடி ஆபத்சகாய ஈஸ்வரர் கோவிலில், வரும் 28ம்தேதி குருப் பெயர்ச்சி விழா நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஆலங்குடியில், பாடல் பெற்ற ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா நடந்து வருகிறது. வரும், 28ம் தேதி,இரவு, 9:00 மணிக்கு,குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதை முன்னிட்டு, வரும்,16ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரையும், குரு பெயர்ச்சிக்குப் பின், 30ம் தேதியில் இருந்து, ஜூன் 6ம்தேதி வரையும், இரு கட்டங்களாக லட்சார்ச்சனை விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்க விரும்புவோர்,400 ரூபாய் மணியார்டர் அல்லது டி.டி.,யாக அறநிலையத்துறை உதவி இயக்குனர், ஆலங்குடி, வலங்கைமான் தாலுகா, திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.