திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா துவங்கியது மே 24ல் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2013 10:05
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழா துவங்கியது.பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் தொடக்கமாக, நேற்றுமுன்தினம் மாலை, சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவர். மே 23 வரை வசந்த உற்சவம் நடக்கும். மே 24 அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனைகள் நடக்கும். காலை 7 மணிக்கு புறப்பாடாகி, கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு, மதியம் 2 மணி வரை பக்தர்கள் எடுத்து வரும் பாலை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.மே 25ல், மொட்டையரசு திருவிழா நடக்கிறது. அன்று காலை சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாக திடலில் எழுந்தருளுவர். இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவர். விழாவையொட்டி, மே 25வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை.