பதிவு செய்த நாள்
22
மே
2013
10:05
கோபாலபுரம்: சக்தியம்மன் கோவில் திருவிழாவில், வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில், கலந்து கொண்ட இளைஞர்கள், பரிசுப் பணத்தை வென்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கோபாலபுரம் சக்தியம்மன் கோவில் திருவிழா, கடந்த ஞாயிறு அன்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, கரகம் ஊர்வலம் கொண்டு வரப்பட்டது. இரவு, புஷ்ப வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணி அளவில், வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். பரிசுத் தொகையான, 2001 ரூபாயை இளைஞர்கள் குழுவாக தட்டிச் சென்றனர். பின், மாவிளக்கு மற்றும் மாங்கல்ய பூஜை நடந்தது. இரவு, 9:00 மணியளவில், வாண வேடிக்கைஉடன், அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்தார்.