பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழா, நேற்று நடந்தது. இன்று, மொட்டையரசு விழா நடக்கிறது. இங்க விசாகத்திருவிழா, கடந்த, 15 ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கையில், வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சண்முகர், வள்ளி, தெய்வானையுடன், விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்களை கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 16 கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர். இன்று, மொட்டையரசு விழா நடக்கிறது. காலை, சுப்பிரமணிய சுவாமி, தங்கக் குதிரை வாகனத்தில், சட்டத்தேரில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருளுவார். ஒரே ஒரு முறை ; சண்முகர் சன்னதியில் எழுந்தருளி உள்ள, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு லட்சார்ச்சனை மற்றும் கந்தசஷ்டி விழாவின் போது, தினம் இருவேளை சண்முகார்ச்சனை நடக்கும். வைகாசி விசாகத்தன்று மட்டுமே, சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் சன்னதியை விட்டு புறப்பாடாகி, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். இது, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது.