பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கிராமத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்தலம் கீழமங்கலம். இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உக்கிரவழுதி பாண்டியனால் கட்டப்பட்ட ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர்கோயில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலபோரின்போது சிதிலம் அடைந்த இக்கோயில் தற்போது திருப்பணிகள், கும்பாபிஷேகம் நடந்து புதுப்பொலிவுடன் உள்ளது. இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வனஸ்பதி என்றழைக்கப்படும் ஆல மரம். ஞான கங்கை தீர்த்தமாக உள்ளது. இங்கு எட்டு திசைக்கும் எட்டு தட்சிணா மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.நம்வாழ்வில் வரும் எல்லாபோகங்களுக்கும் இவரே குருவாகி இழந்தயோகங்களை எல்லாம்சேர்த்து வைப்பவராகயோக தட்சிணாமூர்த்தியையும், அகஸ்திய முனிவருக்கு குருவாக இருந்து உபதேசித்த குரு தட்சிணாமூர்த்தியையும், சைவ குரு என்று வீரசைவர்களும், சிவஆகம குரு என்றழைக்கப்படும் 28 சிவாகமத்திற்கும் காரண கர்த்தாவாக உள்ளமேதா தட்சிணாமூர்த்தியையும், சிவபுராணத்தில் வீரகுரு என்றழைக்கப்படும் ஆஸீந தட்சிணாமூர்த்தியையும், பிரம்மனுக்கு 4வேதங்களை வழங்கிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும், முக்தி என்ற சொல் உலகில் தோன்றுவதற்கு முன்பே அவிமுக்தராக தோன்றியவரும் ஜீவாத்மாவை முக்திக்கு அழைத்துச் செல்பவருமானயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தியையும், எல்லா கலையையும் கலையாக உணர்ந்து அதில் லயமாகிவிட்டால் ஞானம்தான சித்திக்கும் என்று உபதேசித்த ஞான தட்சிணாமூர்த்தியையும், சுக்கிராச்சாரியாருக்கு குருவாக விளங்கிய சக்தி தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு பயன் அடையலாம்.
அனவரதநல்லூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது அனவரதநல்லூர். அனவரதம் என்றால் எப்போதும் நிலைத்து இருக்கும். அழியாத தன்மை கொண்ட என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்புபெயரைக் கொண்ட இவ்வூரில் அனவரத சுவாமிகோயில் உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்திக்கு உற்சவர் விக்கிரகம் உள்ளது. பொதுவாக தட்சிணாமூர்த்தி காளத்தி, வாணியம்பாடி, தஞ்சை பெருவுடையார் கோயில்களில் மட்டும் தட்சிணாமூர்த்தி உலாத்திருமேனிகள் உண்டு. இங்கெல்லாம் ஆனி மாதத்தில் வரும் மிருகசீர்ஷ நட்சத்திர தினங்களில் வீதிஉலா நடைபெற்று வருகிறது.வெள்ளூர்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்தலம் வெள்ளூர். இங்கு நடுக்க நாயனார்கோயில் உள்ளது. நக்கல் என்றால் சிரித்தல் என்று பொருள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மற்ற ஸ்தலங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியை போல காட்சி தந்தாலும் மற்ற ஸ்தலங்களை விட மாறுபட்ட வகையில் விரிசடை ஜடாபாவம்போன்றவை இல்லாமல் தலையில் கிரீடம் அணிந்தவராக விளங்குகிறார். லீலாசன ராஜ கம்பீர தட்சிணாமூர்த்தியான இவரை வழிபட்டால் ஆளுமைத்திறன் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.