பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
திசையன்விளை: உவரி சுயம்புலிங்கசுவாமிகோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் வைகாசி விசாக விழாவில்நேற்று முன்தினம் முதலாவது நாளில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள்,தேவார இன்னிசை, சமூகமே சாட்சி எனும் சமூகநாடகம், நகைச்சுவை இசை பட்டிமன்றம் இரண்டாம் நாளானநேற்று விசாகத் திருநாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலையில் உதயமார்த்தாண்ட சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் உச்சிக்கால அபிஷேகம், சுயம்புலிங்கேஸ்வரருக்கு 16 உபச்சாரங்களுடன் கூடியசோடச தீபாராதனை சுவாமி வீதி உலா,வாணவேடிக்கை முழங்க மகர மீனுக்கு காட்சி கொடுத்தல், நாதஸ்வர இசை, பக்தி இன்னிசை கச்சேரி, அறிஞர்களின் சமய சொற்பொழிவுகள், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் உவரி கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து, திருக்கனம் சாற்றி சுவாமி தரிசனம் செய்த பின்னர் இக்கோயிலில் வழங்கப்படும் பிரசாதமாகிய மணம் மிக்க சந்தனத்தை வாங்கி உடல் எங்கும் பூசி கொண்டனர். திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் தங்களதுநேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் இக்கோயிலில் மட்டுமே வித்தியாசமானநேர்த்தி கடனான கடலில் நீராடி ஈரத்துணிகளுடன் பிளாப்பெட்டிகளில் கடலில் இருந்து மணல் எடுத்து தலையில் சுமந்து வந்து கடற்கரையில் எண்ணிக்கையில் குவித்தும்நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகம்,கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளைகோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் டி.எஸ்.பி., ஸ்டேன்லிஜோன்ஸ் தலைமையில் உவரி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் சிறப்புபோலீசார் செய்திருந்தனர். தீதடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை திசையன்விளை நிலைய அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் வீரர்கள் செய்திருந்தனர். விழாவிற்கு உவரிக்கு பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.