Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று காஞ்சி மகாபெரியவரின் ஜென்ம ... அதிக நறுமணத்துடன் திருப்பதி லட்டு தயாரிக்க தேவஸ்தானம் முடிவு! அதிக நறுமணத்துடன் திருப்பதி லட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் மஹாயாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மே
2013
01:05

குருபகவான் தமிழ் ஸ்ரீவிஜய வருடம் வைகாசி மாதம் 14 ம் தேதி 28.5.13 செவ்வாய்கிழமை கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியும், உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சித்தயோகத்தில் இரவு 9.18 மணியளவில் ரிஷபம் ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு பிரவசிப்பதை முன்னிட்டு குருவித்துறை குருபகவானுக்கு லட்சார்ச்சனை 26.5.13 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம் 27.5.13 திங்கள்கிழமை லட்சார்சனை நிறைவு பெறும்.

28.5.13 செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் லட்சார்ச்சனை தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். குரு பெயர்ச்சியை முன்னிட்டு இரவு 7.00 மணிக்கு மஹாயாகம் தொடங்கி 9.18 மணிக்கு மஹாபூர்ணாஹீதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

இருள் நீங்கும் அருள் கிரகம்: கு என்றால் இருள் ரு என்றால் நீங்குவது. குரு என்ற சொல்லுக்கு அர்த்தம் இருள்நீக்கி என்பதே.

நவக்கிரகங்களில் குரு எனப் பெயர் பெற்ற வியாழனும் மடமை இருளை-வறுமை இருளை கயமை இருளை, சிறுமை இருளை, அசுப இருளை, பாப இருளை நீக்குபவராக விளங்குகிறார்.

ஞானம், செல்வம், ஒழுக்கம், பெருமையும் மங்கலமும், புண்ணியமும் குருபகவனாலேயே ஒளி பெறுகின்றன! நீங்கள் எந்த ராசியோ அந்த ராசியிலிருந்து 2,5,7,9,11, ஆகிய இடங்களில் குரு சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும் என்பம் ஜென்மராசியான 1 மற்றும் ஜென்ம ராசியிலிருந்து 3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிப்பது சுமாரான பலன்களை கொடுக்கும்.

ஸ்ரீ விஜய வருடம் வைகாசி மாதம் 12 ம் தேதி 26.5.13 ஞாயிற்றுக்கிழமை: காலை 10.30 மணிக்கு மேல் புண்யாக வாஸணம், மஹாசங்கல்பம் லட்சார்ச்சனை தொடக்கம். மதியம் 12.00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு. திருவாரதனம், சாத்துமுறை கோஷ்டி, மாலை 5.00 மணிக்கு இரண்டாம் கால லட்சார்ச்சனை தொடக்கம். இரவு 8.00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு. திருவாரதனம், சாத்துமுறை கோஷ்டி.

27.5.13 திங்கள்கிழமை: காலை 9.00 மணிக்கு மூன்றாம் கால லட்சார்ச்சனை தொடக்கம். மதியம் 12.00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு. திருவாரதனம், சாத்துமுறை கோஷ்டி. மாலை 5.00 மணிக்கு நான்காம் கால இலட்சார்ச்சனை தொடக்கம், இரவு 8.00 மணிக்கு இலட்சார்ச்சனை நிறைவு, திருவாரதனம், சாத்துமுறை கோஷ்டி

28.5.13 செவ்வாய்கிழமை: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பரிகார லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 7.00 மணிக்கு மேல் புண்யாகவாஸனம். ஹோமசங்கல்பம், நவகலச ஸ்தபன ஆவாஹனம், திருவாராதனம், அக்னி பிரதிஷ்டை ஹோமம் ஆரம்பம். இரவு 9.18 மணிக்கு மஹாபூர்ணாஹூதி, இதனை தொடர்ந்து குருபகவானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை தொடர்ந்து மஹா ஆரத்தி நடைபெறும். அதன் பின் பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும்.

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி பலன்கள்

நன்மையான பலன் பெறும் ராசிகள்

 2 ம் இடம் ரிஷபம்-தனலாபம், சத்ருஜெயம்
 5 ம் இடம்  கும்பம்- பண லாபம், புத்திலாபம், சுகம்
 7 ம் இடம்  தனுசு- பணலாபம், விவாகதிசுபம், செல்வாக்கு கூடுதல்
 9 ம் இடம்  துலாம்- மனைவி மக்கள் சுகம், தனலாபம், சகலகாரிய வெற்றி
11ம் இடம்  சிம்மம்- நினைத்த காரியம் ஜெயம், தனலாபம், பதவி உயர்வு

குருபகவானுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:

ஜன்மத்தில் மிதுனம்- இருப்பிட மாற்றம், தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகுதல், எடுத்த காரியம் காலதாமதம்
3-ம் இடம்  மேஷம்- பதவியில் மாற்றம், காரியங்களில் மாறுதல், அனைத்து காரியங்களிலும் தடங்கல்.
4-ம் இடம்  மீனம்  - பந்துக்கள், சகோதரர்கள் மூலம் துக்கம், உடல்நிலை பாதிப்பு
6-ம் இடம்   மகரம்- துக்கம், புதிய நோய்கள் உண்டாகுதல், இருப்பிட மாற்றம்
8-ம் இடம்  விருச்சிகம்- துக்கம், இருப்பிட மாற்றம், அத்தியான கஷ்டம்
10 ம் இடம்  கன்னி- பதவி நீக்கம் அல்லது பதவி விலகுதல், மன கஷ்டம்
12 ம் இடம்  கடகம்- பண நஷ்டம், மன சஞ்சலம், பதவி மாறுதல்.

குருவித்தறையில் நடைபெறும் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை கட்டணம் ரூ. 300 செலுத்துபவர்களுக்கு 2 கிராம் குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி டாலரும், பிரசாதமும் வழங்கப்படும். லட்சார்ச்சனை கட்டணம் ரூ 100 செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும்.

இத்திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. திருப்பணி செய்ய விரும்புவோர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோயில்
குருவித்துறை, சோழவந்தான் வழி
மதுரை மாவட்டம்.
மொபைல்: 99656 70975, 97902 95795

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar