மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் வருகிறது. காரணம் மனம் முழுக்க கெட்ட எண்ணங்களின் ஆதிக்கமே மேலோங்கி யிருக்கிறது. மனதை சீர்படுத்த ஒரே வழி, ஆரோக்கியமான எண்ணங்களை மட்டும் நுழைய அனுமதிப்பது தான். மன இயக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என் கைக்குள் இருக்கிறது, என்ற எண்ணம் எப்போதும் அடிமனதில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் மனோதத்துவ மேதை சிக்மன் பிராய்டு. உலகில் நிறைய விஷயங்களைத் தெரிந்திருப்பது தான் புத்திசாலித்தனம் என்று தவறாக நினைக்கிறோம். புத்திசாலித்தனம் என்பது வாழ்வை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது தான், என்கிறார்கள் அவர்கள். நியாயம் தானே!