பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை ஸ்ரீதட்சண காசி கால பைரவர் கோவிலில், குருபெயர்ச்சியையொட்டி, இன்று (மே 28) சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இன்று இரவு, 9 மணி மூன்று நிமிடத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது. இதையொட்டி கால பைரவர் கோவிலில், மாலை, 6.30 மணிக்கு ஸ்ரீகணபதி ஹோமம், 27 நட்சத்திரங்களுக்கு பரிஹார பூஜைகளும், கால பைரவருக்கு மஹா அபிஷேகம், இரவு, 9 மணி மூன்று நிமிடத்தில் சிறப்பு பூஜைகளும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து கால பைரவர் கோவில் குருக்கள் கிருபாகரன் கூறுகையில், ""இன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது. குரு பெயர்ச்சி நடக்கும் நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்வதன் மூலம் குரு பார்வையை பெற்று பலன் பெறலாம். குரு பெயர்ச்சி ரிஷபம், சிம்மம், துலாம், தனசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பு பலன்களையும், மேஷம், கடகம், மகரம் ஆகிய ராசிகளுக்கு மத்திய பலன்களையும் கொடுக்கும்.மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் பரிஹார பூஜைகள் செய்ய வேண்டும். கால பைரவர் கோவில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு பரிஹார பூஜைகள் செய்து, இறைவன் அருள் பெறலாம். இவ்வாறு கூறினார்.