பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
திருச்செங்கோடு: கொத்தம்பாளையம், செல்வ மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது.திருச்செங்கோடு அருகே, 85 கவுண்டம்பாளையம் பஞ்சாயத்து கொத்தம்பாளையத்தில், செல்வ மகாமாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை, 7.30 மணிக்குள் நடக்க உள்ளது.திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிவாச்சாரியர் மகாதேவ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதையொட்டி, இன்று காலை கணபதி பூஜையுடன் விழா துவங்குகிறது.கோவிலில் அமைக்கப்பட்டுள்ள செல்வ விநாயகர் சன்னதியில் திருமூர்த்தம் நிறுவி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து காளியம்மன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் மதுரைவீரன் ஸ்வாமி திருமூர்த்தங்கள் நிறுவப்பட்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும்.நிறைவாக செல்வ மகாமாரியம்மன் எழுந்தருளியுள்ள கருவறை கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கிராம மக்கள், கோவில் கமிட்டியினரும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மே, 30 முதல் மண்டலஅபிஷேகம் நடக்க உள்ளது.