காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, பெரியாம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பதி திருமலா தேவஸ்தானம் சார்பில், ஸ்வாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருமலை தேவஸ்தானத்தை சேர்ந்த வேத பாடசாலை விற்பனர்கள் தலைமை வகித்து, ஸ்வாமி திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். முன்னதாக, திருமலையில் இருந்து சிறப்பு வாகனம் மூலம் வந்த ஸ்வாமி உற்சவ சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.பி., சேகர், மனோகரன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.