பதிவு செய்த நாள்
05
ஜூன்
2013
10:06
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், காப்பணி மகோற்சவ திருவிழா கோலாகலமாக நடந்தது.மதுராந்தகத்தில் புகழ் பெற்ற, மாரியம்மன் என்றழைக்கப்படும், ரேணுகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் காப்பு கட்டி, கூழ்வார்த்தல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கு, கடந்த மாதம், 28ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு, தினமும் அம்மன் கரகம் வீதியுலா நடந்தது. விழா நிறைவாக நேற்று காலை, விசேஷ அபிஷேக தீபாராதனை, சந்தன காப்பு அபிஷேகமும் நடந்தது.இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். நண்பகல், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மின் விளக்கு அலங்காரத்தோடு, அம்மனின் வீதியுலா நடந்தது.