Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆக.,9ல் வான்கோவர் வீதிகளில் தேர் பவனி! குன்றத்தில் ஊஞ்சல் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
10:06

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (14ம் தேதி )துவங்குகிறது. 22ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 9 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா நாளை (14ம் தேதி) துவங்குகிறது. காலை 7.47 மணிக்கு மேல் 8.17 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது. அன்று முதல் தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடக்கிறது. இணை ஆணையர் அன்புமணி முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் திருமலை பக்தி சொற்பொழிவு, 6 மணிக்கு விஜயலெட்சுமி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி, காலை 8 மணிக்கு தாயிற்சிறந்த தயாவான தத்துவன் என்ற தலைப்பில் தேச மங்கையர்கரசி பக்தி சொற்பொழிவு நடக்கிறது. நிகழ்ச்சியை ராஜதீபன் ஜூவல்லரி, சிட்டி யூனியன் பாங்க், நெல்லை துணிவணிகர் இலக்கிய வட்டத்தினர் இணைந்து நடத்துகின்றனர்.

15ம் தேதி மாலை 5 மணிக்கு காந்திமதி அம்பாள் கைங்கர்ய கமிட்டி குழுவினரின் பக்தி சொற்பொழிவு, 6 மணிக்கு சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சென்னை புஷ்பா ஆனந்த் பக்தி இன்னிசை நடக்கிறது. நல்லி சில்க்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சவுபாக்கியா ஜூவல்லர்ஸ், பாளை., கணேஷ் ஸ்டோர்ஸ், நெல்லை டாடா கோல்டு பிளஸ் ÷ஷாரூம் நிறுவனத்தினர் வழங்குகின்றனர். 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோமதி திருநாவுக்கரசு சொற்பொழிவு, 6 மணிக்கு கிருஷ்ணவாணி நிருத்தியாலயா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு பெங்களூர் சம்பத்குமார் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை கல்யாண் ஜூவல்லர்ஸ், நெல்லை கிருஷ்ணா டிவிஎஸ்., கரூர் வைஸ்யா பாங்க், கோடீஸ்வரன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் வழங்குகின்றனர். 17ம் தேதி மாலை 5 மணிக்கு கலைமுத்து இசை நாட்டியப்பள்ளி மாணவி ஹரிதா நாட்டிய நிகழ்ச்சி, 6 மணிக்கு பழனி வெங்கடேஷ் குழுவினரின் திருமுறை விண்ணப்பம், இரவு 8 மணிக்கு ராஜேஷ் வைத்யா வீணை இசை நடக்கிறது. நிகழ்ச்சியை நெல்லை தினமலர், ஹோட்டல்கள் ஆர்யாஸ், ஜானகிராம், நயினார், ராம்பிரசாத், மதுரம், விசாகபவன், சேலம் சரவணபவா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் நிறுவனத்தினர் வழங்குகின்றனர். 18ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ ராம நாட்டியலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு கோவை ஜெயராமன் பக்தி இன்னிசை, இரவு 8 மணிக்கு டி.எம்.கிருஷ்ணா பக்தி இன்னிசை நடக்கிறது. நிகழ்ச்சியை கணபதி கெமிக்கல்ஸ், நேச்சுரல் காட்டன் மில்ஸ், சியமளா புக் சென்டர், அனில் ஸ்டோர், ராஜேஷ் எலக்ட்ரிகல்ஸ், சுதர்ஸன் மருத்துவமனை மற்றும் லெட்மிவிலாஸ் பாங்க் நிறுவனத்தினர் வழங்குகின்றனர். 19ம் தேதி மாலை 5 மணிக்கு ஜோதிடர் பாலசுப்பிரமணியன் பக்தி சொற்பொழிவு, 6 மணிக்கு பட்டினத்தார் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பக்தி சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு சென்னை ஆர்.எஸ்.மனோகர் வழித்தோன்றல் பாலசுந்தரம் வழங்கும் "ராகு கேது புராண நாடகம் நடக்கிறது. நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை நிறுவனத்தினர் வழங்குகின்றனர். 20ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வசுமதி பக்தி சொற்பொழிவு, 6 மணிக்கு நிருத்தியாஞ்சலி நாட்டியாலயா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு ஆன்மிகம் தழைக்க பெரிதும் துணை நிற்பது பக்தி நெறியா, தொண்டு நெறியா என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சியை ஆரெம்கேவி நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

தேரோட்டம்: 21ம் தேதி மாலை 5 மணிக்கு விஜயலெட்சுமி பக்தி சொற்பொழிவு, 6 மணிக்கு சென்னை சாய் ஸ்ருதி இசைக்குழு மாணவிகளின் பக்தி இன்னிசை, இரவு 8 மணிக்கு டாக்டர் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சி நடக்கிறது. போத்தீஸ் நிறுவனத்தினர் நிகழ்ச்சியை வழங்குகின்றனர். 22ம் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சங்கீத ஸம்வர்த்தினி சபா மாணவிகளின் பக்தி இன்னிசை, 6 மணிக்கு நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுலை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு எம்.ஆர்.விஜயா, பாம்பே சாரதா குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிது. நிகழ்ச்சியை நெல்லை ஓட்டல் சரவணபவா, நாகா மைதா, இந்தியன் பாங்க், நெல்லை பனியன் ஏஜென்ஸி, ஜி.டி.எம்.தங்க நகை மாளிகை நிறுவனத்தினர் வழங்குகின்றனர். விருந்தினர் உபசரிப்பு பணியில் நெல்லை ஆர்.ஆர்.இன் ஓட்டல் நிறுவனம், மேடை அலங்கார பணிகளில் கஜானா ஜூவல்லர்ஸ் இணைந்து செய்துள்ளனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவிக் கமிஷனர் கண்ணதாசன், செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், ஆய்வர் ஆனந்த் ஆகியோரும், கலை நிகழ்ச்சிகளை நெல்லை கல்சுரல் அகடமி நிறுவனத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar