பதிவு செய்த நாள்
17
ஜூன்
2013
10:06
நகரி: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நாளை (18ம் தேதி) பிரம்மோற்சவம் துவங்கி, வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. சித்தூர் மாவட்டம், புத்தூர் அடுத்த, வடமால் பேட்டை அருகே, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி தேவஸ்தான சார்பில் செயல்படும் இக்கோவிலில், நாளை (18ம் தேதி) பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரம்மோற்சவ துவக்க நாளில், வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெரிய சோஷ வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நிகழ்ச்சி நிரல்:
தேதி காலை 8:00 இரவு 8:00
18 கொடியேற்றம் பெரியசோஷ வாகனம்
19 சின்னசோஷ வாகனம் அம்ச வாகனம்
20 சிம்ம வாகனம் முத்துபந்தல் வாகனம்
21 கல்பவிருட்ச வாகனம் சர்வபூபால வாகனம்
22 மோகினி அலங்காரம் கருட வாகனம்
23 அனுமந்த வாகனம் கஜன வாகனம்
24 சூர்யபிரபை வாகனம் சந்திரபிரபை வாகனம்
25 ரத உற்சவம் அஸ்வ வாகனம்
26 சக்கரஸ்நான வைபவம் கொடி இறக்கம்
பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான, 21ம் தேதி மாலை, 5:00 மணி முதல், இரவு, 7:30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளும் சீனிவாச பெருமானுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடத்தப் படவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.