Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிகண்டினி சூரியன் தம்பி அருணன் சூரியன் தம்பி அருணன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
திருவாழியாழ்வான்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2013
11:06

திருவாழியாழ்வான் (சக்கரத்தாழ்வார்)

மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

சக்கரத்தானை திருவாழியாழ்வான் என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு ஹேதிராஜன்  என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். சுவாமி தேசிகன் அருளிய சுதர்ஸனாஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்தால் எண்ணிலடங்காத நன்மைகளை அடையலாம்.

பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார். சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது  நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு சுடராழி வெண்சங்கேந்தி வாராய் என்று பாமாலை சூட்டுகிறார்.

சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார்.  நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.

அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால். புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட கிருஷ்ண பரமாத்மா சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.

அநீதிகளை அழிக்க (பகவானுக்கு) பயன்படுகின்ற சக்கரத்தாழ்வாரின் சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சி வரதர் கோயில், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

இந்த சுதர்ஸனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் வழிபாடு: சக்கரத்தாழ்வார் காயத்திரி மந்திரங்கள்!

எதிரிகளை வெல்ல ...

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் ஸ்தோத்திரம்

ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) மந்திரம்

வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.

ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் ÷க்ஷõபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
ஸ்வாஹா.

ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய-பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந், தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்ரஸமய ப்ரஸமய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar