உடுமலை: உடுமலை கொங்கல்நகரத்தில், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (19ம் தேதி) நடக்கிறது.பழமை வாய்ந்த இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் ஆசார்யவர்ண நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின்னர், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குனியமுத்தூர் லட்சுமி நாராயணசாமி திருக்கோவில் கோலாட்ட பஜனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு தீர்த்த ஸ்ங்கிரஹம், கும்பங்கள் புறப்பாடு, யாகசாலை பிரவேசம், திருமஞ்சனம் உட்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை 4:00 மணிக்கு கோபூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. காலை 6:30 மணிக்கு விமான மகா கலஷாபிஷேகமும், 7:00 மணிக்கு பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.