சென்னை: எழும்பூரில், புதிய இருதய ஆண்டவர் தேவாலயம் திறக்கப்பட உள்ளது. இதில், பல்வேறு மறை மாவட்ட பேராயர்கள் கலந்து கொள்கின்றனர். எழும்பூரில் உள்ள, இருதய ஆண்டவர் தேவாலயம் பழமையானது. இடப்பற்றாக்குறையால், கடந்தாண்டு இடிக்கப்பட்டு, புதிய தேவாலய கட்டுமான பணிகள் நடந்தன. பணிகள் முடிந்த நிலையில், இன்று மாலை புதிய தேவாலயம் திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில், சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி, முன்னாளர் பேராயர் சின்னப்பா, செங்கை ஆயர் நீதிநாதன், தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு, கூட்டு திருப்பலியும், வழிபாடும் நடக்கின்றன.