சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழி திருவிழாவில், பக்தர்கள் தீமிதித்து, அம்மனை தரிசித்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு காப்பு கட்டி, பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை, நகர் மந்தைகளத்தில், பூக்குழி இறங்குதல் நடந்தது. இதை காண, மக்கள் கூடியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தினர். பூக்குழி இறங்கிய பலர், தடுமாறி விழுந்து காயமுற்றனர்.