நெட்டப்பாக்கம்: எல்.ஆர்.பாளையம் பெரியபாளையத்தம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.கண்டமங்கலம் ஒன்றியம், லிங்கா ரெட்டிப்பாளையத்தில் பெரியபாளை யத்தம்மன் கோவில் உள் ளது. இக்கோவில் செடல் உற்சவம் நேற்று துவங்கியது. அதையொட்டி, காலை 6:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, 9:00 மணிக்கு கரக வீதியுலா, பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தலும், தொடர்ந்து செடல் உற்சவமும் நடந்தது.பக்தர்கள் அலகு குத்தி, சாமி எழுந்தருளிய வாகனத்தை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாளை (27ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.