பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
11:06
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மழை வேண்டி, கோவில்களில் வருண ஜெபம் நேற்று நடந்தது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மழை வேண்டி வருண ஜெபம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதியிலிருந்து, 27ம் தேதி வரை கோவில்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு, வ.உ.சி தெருவில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று, காலை, 7:00 மணிக்கு, வருண ஜெபம் சிறப்பு பூஜை நடந்தது. பகல் 1:00 மணிக்கு, பூஜையில் வைக்கப்பட்ட கலசங்களிலிருந்து, புனித நீரை கிணற்றில் ஊற்றினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை செயல் அலுவலர் வீருபொம்மு, தக்கர் வேதாமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். மேலும், செங்கல்பட்டு, கோண்டராமர் கோவிலில் நேற்று முன்தினம், காலை 9:30 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம், வருண ஜெபம் ஆகியவை நடந்தன. கலசங்களிலிருந்த புனித நீரை, கோவில் அருகிலிருந்த குளம் மற்றும் கிணறுகளில் தெளித்து, வழிபாடு நடந்தது.