பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
வீரவநல்லூர்:வீரவநல்லூரில் கண்ணன் சேவா சமிதி சார்பில் வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் நாமசங்கீர்த்தன பஜன் மேளா நடக்கிறது. முதல்நாள் காலை மன்னார்கோவில் பெரியநம்பிசுவாமிகள் மேளா நிகழ்ச்சிகளை துவக்கிவைக்கிறார் கண்ணன் சேவா சமிதி குழுவினர் மற்றும் வெள்ளங்குளி, வீரவநல்லூர், கிளாக்குளம் புதுக்குடி ஊர் பாகவதர்களின் தோடயமங்களம் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. அடுத்து கும்பகோணம், சிவகாசி, தாயில்பட்டி, மதுரை திருநகர், தேனி, அல்லிநகரம், கோவிந்தநகரம், அருப்புகோட்டை, பெரியபுளியம்பட்டி, கோபாலசமுத்திரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பாகவதர்களின் பஜனை நடக்கிறது. ஆய்க்குடி குமார் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.
இரண்டாம் நாள் காலை காக்கிவாடன்பட்டி, களங்காப்பேரி, நெல்லைதிருத்து, களக்குடி, சிவகாசி, கொங்கலாபுரம், கீழப்பாவூர், சிவந்திப்பட்டிபாண்டிச்சேரி, வைத்தியகுப்பம் ஆகிய ஊர்களின் பாகவதர்கள் பஜனை நடத்துகின்றனர். மாலை, நான்குநேரி வானமாமலை, ஆழ்வார்திருநகரி, திருக்குறுங்குடி ஜீயர்சுவாமிகள் ஆசியுரை வழங்குகின்றனர். அடுத்து நகர சங்கீர்த்தனத்தை அம்பை எல்.எல்.ஏ.,சுப்பையா துவக்கி வைக்கிறார். ராஜகோபால்தாஸ் தலைமை வகிக்கிறார்.திண்டுக்கல் அகிலஇந்திய சவுராஷ்டிரா மத்திய சபை தலைவர் சாந்தாராம், பாளையங்கோட்டை தென்மண்டல சவுராஷ்டிரா பேரவை தலைவர் அனந்தராமன், வீரவநல்லூர் டவுன் பஞ்., தலைவர் பழனிச்சாமி, முன்னிலை வகிக்கின்றனர். நகர சங்கீர்த்தனத்தில் 48 பஜனை குழுவினர் கலந்து கொள்கின்றனர். அடுத்து கல்லிடை குறிச்சி ருக்ருபாபஜனை மண்டலியின் திவ்யநாமபஜனை நடக்கிறது.மூன்றாம் நாள் நிறைவு நாளன்று காலையில் அனைத்து ஊர் பாகவதர் குழுவினரின் சம்பிரதாய பஜனை நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் ஆஞ்சநேயர் உற்சவம் அடுத்து சுபமங்களம், மங்களஆராத்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.