பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
10:07
ஜம்மு: அமர்நாத் குகை கோவில் பனி லிங்கத்தை, கடந்த நான்கு நாட்களில், 37 ஆயிரம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், இயற்கையாகவே பனி லிங்கம் தோன்றும். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க, ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பனி லிங்க தரிசன யாத்திரை, கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது. கடந்த நான்கு நாட்களில், பனி லிங்கத்தை, 37 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதற்கிடையில், ஜம்முவில் உள்ள முகாமிலிருந்து, பனி லிங்க தரிசன யாத்திரைக்காக, நேற்று, 2,168 பேர் புறப்பட்டுச் சென்றனர். இவர்களில், 460 பேர் பெண்கள், 35 பேர் குழந்தைகள்.