பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் ஆடி பிரம்மோத்சவ விழா, ஜூலை 14ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை, மாலையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமார், யானை, பூப்பல்லக்கு, குதிரை வாகனங்களில் வீதியுலா நடக்கும். 19ம் தேதி இரவு 7 மணிக்கு, சுந்தரராஜப் பெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம், 22ம் தேதி காலை 9 முதல் 10.15 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் பாபுஜி, தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன் செய்துள்ளனர்.