பதிவு செய்த நாள்
03
ஜூலை
2013
11:07
ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு விழா நடந்தது. ஆனிப் பெருந்திருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற கோயில் களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இக் கோயிலில் இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது. விழா வில் குரங்கணி சுற்றுவட்டார பொதுமக்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார்சங்கத்தினர், ஏரல் நகர வியாபாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 15ம் தேதி மாலை 6மணிக்கு சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத் தலைவர் முத்துமாலையின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. வரும் 16ம் தேதி ஆனிப் பெருந்திருவிழா அன்று காலை 9 மணிக்கு கிளாரினெட் இன்னிசை, காலை 10 மணிக்கு கூட்டு வழிபாடு, காலை 11 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, 12 மணிக்கு பக்தி சொற்பொழிவு, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 3 மணிக்கு பக்தி சொற்பொழிவு, 4 மணிக்கு மங்கள இசை, 5 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 7 மணிக்கு பக்தி பாடல்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், அதை தொடர்ந்து மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகளும் முக்கிய நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு ஸ்ரீநாராயண சுவாமி திரு வீதி வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஆனிப் பெருந்திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார், குரங்கணி 60 பங்கு நாடார்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.