பதிவு செய்த நாள்
05
ஜூலை
2013
11:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், நீராடும் பக்தர்கள் சறுக்கி விழால் இருக்க, "ரப்பர் புளோர் மேட் அமைக்கப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் சுற்றி வரும்போது, தேங்கியுள்ள தண்ணீரில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இதையடுத்து, பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக, கிழக்கு வாசலில் இருந்து, சுவாமி சன்னிதி செல்லும் பாதையில், 100 மீட்டர் தூரத்திற்கு, "ஆன்டிஸ்கிட் ரப்பர் மேட் நேற்று அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக, தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் பாதையில், அமைக்கப்படும் என, கோவில் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.