பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில், சுதர்ஸன ஜெயந்தி உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு, திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார்களால், மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ளது. யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னிதிகளாக எழுந்தருளியுள்ளனர். இங்கு, ஆண்டுதோறும், சுதர்ஸன ஜெயந்தி உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 10:30 மணிக்கு, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, புஷ்ப அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.