பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
கூவம்:கூவம் திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவிலின் மகா பவித்ரோற்சவ விழா, வரும், 19ம் துவங்குகிறது. கடம்பத்தூர் ஒன்றியம், கூவம் கிராமத்தில், திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், தேவாரம் பாடல் பெற்ற, 32 திருத்தலங்களில், 14வது திருத்தலம் கூவம் ஆகும். இத்தலம் முப்புரம் எரிசெய்த நற்சிவனை நாயகமாகக் கொண்டுள்ளது. மகா பவித்ரோற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒருமுறை செய்வது விசேஷமானது. அன்றாடம் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் ஏற்படும் குறைகள், சோவாரம், சுக்ரவாரம், மாதப்பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை ஆகிய பஞ்ச பருவங்களில் ஏற்படும் குறைகள், மற்றும் ஒரு கோவிலில் ஏற்படுகின்ற எல்லாவிதமான குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மகா பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. இந்த மகா பவித்ரோற்சவம், இந்த ஆண்டு, நாளை மறுநாள் (19ம் தேதி) துவங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். விழாவின் போது சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்படும்.