குன்னூர்: குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில், ஒரே பளிங்கு கல்லில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில், பகவான் ஷீரடி சாய்பாபா மந்திர் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஷீரடி சாய் பாபாவின் பளிங்கு கல்லிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. திருச்சுழி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி சன்மார்க்க பக்தி இயக்கத்தின் ஸ்தாபகர் சத்யானந்த மகராஜ், நேற்று காலை சிலையை பிரதிஷ்டை செய்தார். பின்னர் சர்வமத பிராத்தனை, உபசார ஆசீர்வாதம், சிறப்பு பூஜைகள் நடந்தன. "இச்சிலை உலகிலேயே உயரமானது எனவும், ஜப்பான் அரசின் விருதை பெற்ற, ஸ்ரீ சிவதத் ஜெமினி மற்றும் ஸ்ரீ சுரேந்திரநாத் ஜெமினி ஆகியோர் சிலையை வடிவமைத்துள்ளனர் என, சாய்பாபா ஆலயத்தின் செயலாளர் நந்தகோபால் மல்லன் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.நேற்று நடந்த விழாவில் பல்வேறு இடங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.