இறைவனை தொழுத பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை. குடும்பத்தில் நம்மை நம்பியிருப்பவர்களைக் காப்பாற்றுவது நமது கடமைகளில் முக்கியமானது. திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது "தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள். இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழுபலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள். காரணம், தம் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது, ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அதேபோல், தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு வைத்து, அவர்களைக் கவலையிலும் நிராசையிலும் ஆழ்த்திவிடுவதும் ஏற்ற செயல் அல்ல என்கிறது. அதாவது, இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யுங்கள். நம் குடும்ப நலனையும், நம்மைச் சார்ந்துள்ளவர்கள் நலனையும் பேணுவதில் கவனம் செலுத்துங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.25