ஸ்ரீவி., ஆடிப்பூர விழா தேர் தயார் செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2013 10:07
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவையெõட்டி தேர் தயாராகும் பணி நடந்து வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற 108 வைஷ் ணவ திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆண்டாள் பிறந்த மாதமான ஆடிமாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டு தோறும் ÷தர்திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு ஆக.1ம் தேதி கொடி÷யற்றத்துடன் தேர்திருவிழா துவங்கி 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர் தயார் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தற்கட்டமாக தேரை சுத்தம் செய்யும் பணி நடந்தது. தற்போது ÷தரின் மேல் சட்டங்கள் கட்டும் பணி நேற்று துவங்கியது. தேர் திருவிழா நடப்பதையொட்டி தற்போதே பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதால் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.