வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மாத்தூர் காலங்கரை அமச்சியாரம்மன் கோயிலில், ஆடிப்பவுர்ணமி விழா நடந்தது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத பவுர்ணமியில், நடுநிசியில் சிறப்பு பூஜைகளுடன் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று அதிகாலை வரை நடந்தது. சிறப்பு அபிஷேகங்கள் முடிந்தபின் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். உப்பு, மிளகாய் வத்தல், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர். வழிபாடு முடிந்தவுடன், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு வனபூஜைகள், தீபாரானைகள் நடந்தது.