பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
மதுராந்தகம்: தொன்னாடு கெங்கையம்மன் கோவிலில், ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொன்னாடு கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடித் திருவிழா, நேற்று சிறப்பாக நடந்தது. காலை 8:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. காலை 11:00 மணிக்கு, அம்மன் திருவீதியுலா வந்தார். பகல் 2:30 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. இதையடுத்து, இரவு 11:00 மணிக்கு, அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக, கடந்த 21ம் தேதி, சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டுதலும் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது.