பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
தர்மபுரியை அடுத்த பைசுஅள்ளி, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் மன் நல கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.இதையொட்டி, காலை, 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும் நடந்தது. மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மல்லிகா குத்து விளக்கு ஏற்றி வைத்தார், சுதா சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் சுப்பிரமணி வரவேற்றார்.காலை, 7 மணிக்கு சக்தி கொடியேற்றம் நடந்தது. ஊர் கவுண்டர் மாதப்பகவுண்டர், ஊர் நாயுடு புகழேந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்ட தலைவர் ஆன்நதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வேள்வி குழு இணை செயலாளர் மகாலிங்கம், வேள்ளி பொறுப்பேற்க, எம்.எல்.ஏ., அன்பழகன் வேள்வியை துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாக குழு தலைவர் ராஜாமணி, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ராமுலு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட பிரச்சார குழு இணை செயலாளர் சண்முகம், மாவட்ட தணிக்கை குழு இணை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பைசுஅள்ளி பஞ்சாயத்து தலைவர் கோபி அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் வேலவன் ஆடை தானத்தை துவக்கி வைத்தார்.வார்டு உறுப்பினர் பரந்தராமன் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தங்களை வழங்கினார். துரை, பெரியசாமி, அருணாசலம், கேசவராஜ், ரங்கநாதன், பவுன்ராஜ், ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம், சென்னகிருஷ்ணன், மாதையன், சுரேஷ், பிரபு, சின்னையன், கோவிந்தன், மணி, பரமசிவன், மாரிநாயுடு, சங்கர், சேகர், சாய்கண்ணன், சுப்பரிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் மணி நன்றி கூறினார்.