பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், ஆடிவெள்ளி கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. குறிஞ்சி நகர் பி.கே.எஸ் காலனி மக்கள் 9வது ஆடித்தீர்த்தக்குழு சார்பில், சேத்துமடை காளியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, பி.கே.எஸ்., காலனி முத்து விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது.பின் அங்கிருந்து ஊர்வலமாக தீர்த்தக்குடம் எடுத்து வந்து மாகாளியம்மன் கோவிலில், பூஜைகள் நடந்தன. விழாக்கமிட்டி தலைவர் மணியன், செயலாளர் சின்ராஜ், பொருளாளர் ராஜன் மற்றும் கவுசல்யா,சின்னமணி உட்பட பலர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.