திசையன்விளை:காரம்பாடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது.காரம்பாடு முத்தாரம்மன் கோயில் ஆடி கொடை விழா மூன்று நாட்கள் நடந்தது. விழாவில் கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு பூஜை, மஞ்சள்பெட்டி ஊர்வலம், அம்மன் மஞ்சள் நீராடல், சிறப்பு அலங்கார பூஜை, முளைப்பாரி எடுத்தல், வில்லிசை, மேளம், உணவு எடுத்தல், விளையாட்டு போட்டிகள், இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.