சிவகாசி:சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா, கொடியேற்றத்துடன் துவக்கி நடைபெற்று வருகிறது. விஸ்வநாதசுவாமி, அம்மாள் தினமும் காலை மற்றும் இரவில், ரத வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, ஜங்கமகுல பண்டார மகா ஜனங்களின் சார்பில், பூச்சப்பர திருவிழா நடந்தது. விஸ்வநாதசுவாமி பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் வலம் வந்தார். பின்னர் விசாலாட்சி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில், ரத வீதிகளில் பவனி வந்து அருள் பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.