பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
நெல்லிகுப்பம்: நெல்லிகுப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆடித் திருவிழா சிறப்பாக நடந்தது. திருப்போரூர் அடுத்த, நெல்லிகுப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 54ம் ஆண்டு ஆடித் திருவிழா, நேற்று, விமரிசையாக நடந்தது. இதையொட்டி, காலை 4:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, 6:00 மணிக்கு, மூலவர் வேண்டவராசிக்கு சங்காபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு, பழங்கால மன்னர் மண்டபத்திலிருந்து, பால் குடம், ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பகல் 1:30 மணிக்கு, உற்சவர் கண்ணாடி அறை திறப்பு விழா நடந்தது. மாலை 3:00 மணிக்கு, பக்தர்கள், ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, அம்மன் வீதிவுலா வைபவம் நடந்தது.