இந்து-முஸ்லிம் மக்கள் இணைந்து மதநல்லிணக்க திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2013 10:07
மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில், ஆண்டுதோறும் இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து, மதநல்லிணக்க விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று, மந்தைவெள்ளி மலையாண்டி கோயில் முன் கூடினர். பின், ஊர்வலமாக பொட்டல் நொண்டிசாமி கோயில் சென்று, சுவாமி கும்பிட்டனர். அன்வர் பேக் கூறுகையில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், ஊர் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கவும் இவ்விழா நடக்கிறது. திருமண சம்பந்தம் செய்துள்ள மற்ற ஊர்களுக்கும், வெற்றிலை பாக்கு கொடுத்து மரியாதை செய்யப்படுகிறது, என்றார். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் ஆண்டுதோறும் நடக்கும் இத்திருவிழா, மற்ற ஊர்களுக்கு முன் மாதிரிதானே.